- Advertisement -
தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும் என்று ஓபிஎஸ் தரப்பு மாவட்ட செயலாளர்கள் கடிதம் எழுதியுள்ளனா்.முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் உள்ள மாவட்ட நிர்வாகிகளை இன்று காலை முதல் தனி தனியாக சந்தித்து வருகிறார். ஆலோசனையின் போது நிர்வாகிகளிடம் ஓபிஎஸ் ஒரு படிவத்தை வழங்கி, அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என உங்கள் கருத்தை எழுதி தர கூறியுள்ளார்.
அந்த கடிதத்தில், பலர் தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும். கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும் என பலர் எழுதி தந்துள்ளனா்.
