Homeசெய்திகள்அரசியல்ஈரோடு இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை திமுகவினர் தொடங்கினர்

ஈரோடு இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை திமுகவினர் தொடங்கினர்

-

- Advertisement -

ஈரோடு இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை இன்று காலை திமுகவினர் தொடங்கினர். திமுகவின் முக்கிய தலைவர்களும், அமைச்சர்களும் வாக்கு சேகரிக்கும் பணியில் மிக விரைவில் வர உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

we-r-hiring

அப்போது, நடத்திய பேச்சு வார்த்தையின் முடிவில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி வெற்றி அடையும் வகையில் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பிரச்சாரத்தில் பணியாற்ற வருகின்றனர் திமுக தொண்டர்கள்.

அதன் ஒரு முக்கிய பகுதியாக, வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று, வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்கும் பணி தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது, வாக்கு சேகரிக்கும் இந்த பணியானது ஈரோடு பெரியார் நகரில் இருந்து தொடங்கி, தொடர்ந்து தொகுதி முழுவதும் நடைபெற உள்ளது.

மேலும், திமுகவின் முக்கிய தலைவர்களும், அமைச்சர்களும் இந்த வாக்கு சேகரிக்கும் பணியில் மிக விரைவில் வர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ