spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தி.மு.க. மீது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

தி.மு.க. மீது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

-

- Advertisement -

 

"நீதிமன்றத்திற்கு செல்லாமல் ஊழல் ஊழல் என வெற்றுப்பேச்சு பேசுவது ஏன்?"- தி.மு.க.வுக்கு வானதி சீனிவாசன் கேள்வி!
Photo: Vanathi Srinivasan MLA

சாதி ஒழிப்புக் குறித்து மேடையில் தி.மு.க. பேசுவது ஒன்று; செயல்பாட்டில் வேறொன்று என்று வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

we-r-hiring

“நவ.26- ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

இது குறித்து பா.ஜ.க.வின் தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் மட்டுமல்ல சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருந்தார். மேலும், சாதியை ஒழிக்கத்தான் தி.மு.க. போராடி வருவதாகவும் கூறினார்.

ஆனால் நடப்பதோ வேறு …. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியின் நகர மன்ற துணைத்தலைவராக பட்டியலின பெண்ணான ராஜலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். பட்டியலின சமூகம் என்பதால் சாதிய ரீதியில் மரியாதை வழங்காமல் திண்டிவனம் நகராட்சித் தலைவர் செயல்படுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

என்கவுன்ட்டரில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை!

நகராட்சி வளர்ச்சி பணிகளுக்குக் கூட அழைத்துச் சென்று ஆய்வுச் செய்வதில்லை. தனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கூட வழங்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். தி.மு.க. மேடையில் பேசுவது ஒன்று…செயல்பாட்டில் வேறொன்று என்பதை இந்த சம்பவம் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது”என்று குற்றம் சாட்டியுள்ளார்.

MUST READ