Homeசெய்திகள்தமிழ்நாடு"நவ.26- ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும்"- வானிலை ஆய்வு மையம் தகவல்!

“நவ.26- ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

-

- Advertisement -

 

சென்னையில் 10 மணி வரை மழை தொடரும்!
File Photo

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் நவம்பர் 26- ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆணையர் பிடியில் சிக்கிய காவலர்கள் , குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பு !

வானிலை நிலவரம் தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் வரும் நவம்பர் 24- ஆம் தேதி வரை கனமழை தொடரும். மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.22) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல், ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை (நவ.23) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 24- ஆம் தேதி அன்று நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

ஆவடியில் போக்குவரத்து சிக்னல் கோளாறு, வாகன ஓட்டிகள் அவதி !

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நவம்பர் 26- ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும். காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்”. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ