ஆவடி பகுதியில் போக்குவரத்து சிக்னல் பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி
ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட ஆவடி சோதனைச் சாவடி சென்னை – திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சிக்னல் அமைக்கப்பட்டு போலீசார் போக்குவரத்தை கண்காணித்து வருகின்றனர்.
இந்த சிக்னல் இயங்குவதற்கான மின் இணைப்பு உயரம் உள்ள கனரக வாகனங்களில் சிக்குவதினாலும் , மழை காரணமாகவும் அவ்வப்போது அருந்து பழுதாகிறது
அவ்வப்போது இதனை சரி செய்து பயன்படுத்தி வந்தனர்.இந்த நிலையில் தனியார் பங்களிப்புடன் புதியதாக சூரிய ஒளியில் இயங்கும சோலார் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவை ஏற்கனவே இயங்கி வரும் சிக்னல் கம்பங்கள் முன் பொருத்தப்பட்டுள்ளது.
இதனால் தற்போது இயங்கி வரும் சமிக்ஞை (Signal) காட்டும் விளக்குகள் சரிவர தெரியாமல் இருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு நிற்பதும்,பின்னர் இயக்குவதற்கும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.சுமார் 2 மாதங்களுக்கு மேலாகியும் புதிய சிக்னல் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஆவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் அவர்களிடம் விசாரித்ததற்கு மழை காலம் என்பதால் சிறிது கால தாமதம் ஏற்பட்டுள்ளது.ஓரிரு வாரத்தில் பழைய சிக்னல் கம்பங்கள் அகற்றப்பட்டு புதிய நவீன சிக்னல் கம்பங்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்துள்ளார்.