Homeசெய்திகள்அரசியல்அதிமுக ஒற்றை தலைவர் ஆனார் எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஒற்றை தலைவர் ஆனார் எடப்பாடி பழனிசாமி

-

- Advertisement -

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி  நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. இந்தக் கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் மனுத் தாக்கல் செய்து இருந்தனர்.
இந்தப் பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

we-r-hiring

தனி நீதிபதி பொதுக்குழு முடிவு செல்லாது என உத்தரவிட்ட நிலையில், ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி. இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பை வழங்கியுள்ள உச்சநீதிமன்றம்அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்தது செல்லும் என வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

 

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்கியதும் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் பன்னீர்செல்வம் தரப்பு பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இதை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க உத்தரவிட்டது. பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலின்பேரில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னத்தை  தேர்தல் ஆணையம் தற்காலிகமாக ஒதுக்கீடு செய்தது. இதனையடுத்து வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது.

இதனை அடுத்து தீர்ப்பின் எதிரொலியாக எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

MUST READ