spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்எடப்பாடி பழனிசாமி தான் இனி நிரந்தர பொதுச் செயலாளர்-தமிழ் மகன் உசேன்

எடப்பாடி பழனிசாமி தான் இனி நிரந்தர பொதுச் செயலாளர்-தமிழ் மகன் உசேன்

-

- Advertisement -

இந்த இயக்கம் உழைப்பவர்கள் கையில் இருக்க வேண்டும் என்பதற்கான தீர்ப்பு தான் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தான் இனி நிரந்தர பொதுச்செயலாளர்.

அதிமுக ஒருங்கிணைந்து தான் உள்ளது. சட்டரீதியாக வெளியேற்றப்பட்டார்களை மீண்டும் ஒருங்கிணைப்பது குறித்து தலைமை முடிவெடுக்கும் என்று தமிழ் மகன் உசேன் கூறினார்.

we-r-hiring

மேலும் அதிமுக எம்.பி தம்பிதுரை கூறுகையில்,

அதிமுகவுக்கு இரட்டை தலைமை சரிவராது, ஒற்றைத் தலைமை தான் வேண்டும் என ஆரம்பம் முதலே சொல்லி வந்தேன். அது தான் இன்று நடந்துள்ளது. ஜெயலலிதாவின் ஆட்சியை அவர் மறைந்த பிறகு சிறப்பாக நடத்தி காட்டியவர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும் எம்.பி தம்பிதுரை கூறினார்.

உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளது. மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஜெயலலிதாவின் ஆன்மாவிற்கு கிடைத்த வெற்றி. வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்! குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும், ஊழல் அரசுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது தான் எடப்பாடி பழனிசாமியின் குறிக்கோள் என்பதை தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தேர்தலிலும் செல்லும் இடமெல்லாம் வரவேற்பு கிடைக்கிறது. எல்லாரையும் கலந்து பேசி தான் நடவடிக்கை எடுப்பேன் என எடப்பாடி தெரிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஓபிஎஸ் உடன் பேச்சு வார்த்தையின் போது பேசியவை குறித்து இப்போது வெளியே சொல்ல இயலாது என்று அதிமுக எம்.பி தம்பிதுரை கூறினார்.

MUST READ