Homeசெய்திகள்அரசியல்இ.பி.எஸின் ஈகோ… அதிமுக -பாஜக கூட்டணிக்கு சிக்கல்: முட்டுக்கட்டை போடும் அண்ணாமலை

இ.பி.எஸின் ஈகோ… அதிமுக -பாஜக கூட்டணிக்கு சிக்கல்: முட்டுக்கட்டை போடும் அண்ணாமலை

-

- Advertisement -

நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இந்நிலையில் பாஜக -அதிமுக கூட்டணி அமைய எடப்பாடி பழனிச்சாமி பல நிபந்தனைகளை விதித்ததாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும் என்றும் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி ஒதுக்கீடு, எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு என்பது குறித்து அதிமுக தான் முடிவு எடுக்கும். இந்த விவகாரங்களில் பாஜக தலையிட கூடாது. கூட்டணி அமையும் பட்சத்தில் டிடிவிினகரன், ஓ.பி.எஸ், சசிகலா ஆகியோரை கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்ள முடியாது என நிபந்தனை விதித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் மறைமுக பனிபோர் இப்போதும் நிலவி வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அமித்ஷாவிடம் கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. டாஸ்மார்க் ஊழல் விவகாரத்தில் அமலாக்கத்துறை உரிய நடவடிக்கை எடுத்து திமுக முக்கிய புள்ளிகளை நிச்சயம் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

"ஸ்டெர்லைட் ஆலைக்கு நிலம் கொடுத்தது தி.மு.க."- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

அண்ணாமலையை பொருத்தவரை அவர் அதிமுக கூட்டணியை ஆரம்பத்தில் இருந்தே விரும்பவில்லை. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கோ, அண்ணாமலை பாஜக தமிழக தலைவராக இருப்பது பிடிக்கவில்லை. இருவருக்கும் நிலவி வரும் பனிப்போர் தொடர்ந்து வருகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணியை அண்ணாமலை விரும்பவில்லை. அதேபோல் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருக்கும் வரை கூட்டணி அமைக்க வேண்டாம் என நினைக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இருப்பினும் பாஜக எடுக்கக்கூடிய முடிவுக்கு அண்ணாமலை கட்டுப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது  - அண்ணாமலை கண்டனம்

இந்த நிலையில் இன்றைய தினம் செய்தியாளர் சந்திப்பில், ”மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் மக்கள் பிரச்சினை குறித்து தான் கோரிக்கை வைத்திருந்தோம். கூட்டணி தொடர்பாக பேசவில்லை” என்று எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் கொடுத்திருந்தாலும், இன்னும் கூட்டணி சரியான முடிவை எட்டவில்லை என்றே கூறப்படுகிறது. அண்ணாமலையை நீக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால் வெளிப்படையாக எடப்பாடி பழனிச்சாமியால் பாஜக கூட்டணியை முழுமனதாக அறிவிக்க முடியவில்லை” என்று கூறப்படுகிறது.

MUST READ