Homeசெய்திகள்அரசியல்ஈரோடு இடை தேர்தல் நிறுத்தம் ? ஒன்றிய அரசு ஆலோசிப்பதாக தகவல்

ஈரோடு இடை தேர்தல் நிறுத்தம் ? ஒன்றிய அரசு ஆலோசிப்பதாக தகவல்

-

- Advertisement -

ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலுக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், தேர்தலை நிறுத்தி வைப்பதற்கான ஆலோசனை டெல்லியில் நடை பெற்று வருகிறது.

ஒன்றிய அரசின் பலம் வாய்ந்த துறை அமலாக்கத்துறை. ஈரோடு கிழக்கு தொகுதியை அதிகாரிகளை வைத்து கண்காணிப்பதற்காக அமலாக்கத் துறையை ஒன்றிய அரசு இறக்கியுள்ளது. சி.பி.ஐ மற்றும் வருமான வரித்துறையை விட கூடுதல் அதிகாரம் பெற்றுள்ள அமலாக்கத்துறை ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் கடந்த காலத்தில் வேலூர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நிறுத்தி வைத்தது போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையும் தற்காலிகமாக ஏன் நிறுத்தி வைக்கக் கூடாது என்ற கேள்வியுடன் கடிதம் எழுதியுள்ளது. மேலும் தி.மு.க.வினர் செய்து வரும் தேர்தல் பிரச்சார வியூகங்களை தெளிவாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

we-r-hiring

ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,30,000 பேர் ஆகும். அதனை வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 22 பாகங்களாகப் பிரித்து, அதில் ஒரு பாகத்துக்கு 500 பேர் என திமுக வினர் தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களை கொண்டு தினமும் ஒரு பகுதியில் ஊர்வலங்களை நடத்துகின்றனர். அந்த 500 பேருக்கும் காலையில் 500 ரூபாய், மாலையில் 500 ரூபாய் என்று தினமும் 1000 ரூபாய் வழங்குகிறது. இப்படி ஒரு நாளொன்றுக்கு ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய் வரை தி.மு.க. செலவு செய்து வருகிறது. இது மட்டுமல்லாமல் ஒரு ஓட்டுக்கு 6,000 ரூபாய் என்று 2 லட்சம் வாக்காளர்களுக்கு கொடுக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த தொகை மட்டும் ரூ.120 கோடி ஆகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு நாலாயிரம் ரூபாய் டி.டி.வி.தினகரன் கொடுத்தார். தி.மு.க. அதில் இரண்டாயிரம் ரூபாய் அதிகப்படுத்தி  6,000 ரூபாய் எனத் திட்டமிட்டு இருப்பதாக டெல்லிக்கு தெரிவித்துள்ளனர். ஓட்டுக்கான பணம் இன்னமும் கொடுக்கப்படவில்லை. தற்போதைய நிலவரப்படி ஒரு பாகத்திற்கு 500 பேர் என்று 22 பாகத்திலும் 1 லட்சம் வாக்குகளுக்கு மேல் கவர் செய்துள்ளது. இன்னும் ஓட்டுக்கு ஆறாயிரம் ரூபாய் கொடுத்தால் ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்தை தாண்டும் என்று அமலாக்கத்துறையினர் ரிப்போர்ட் கொடுத்துள்ளனர்.

அ.தி.மு.க. வாக்குகள் குறைந்து டெபாசிட் இழந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு அ.தி.மு.க. வீடு வீடாக சென்று கெஞ்சுகிறது. ஆனால் அவர்களிடம் வாக்காளர்கள் முகம் கொடுத்து கூட பேச மறுக்கிறார்கள். ஒரு பாகத்திற்கு 500 பேருக்கும் தலைக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் கொடுத்து பத்து நாட்களுக்கு தி.மு.க. அட்வான்ஸ் புக்கிங் செய்துள்ளது. அதனால் அ.தி.மு.க பிரச்சாரத்திற்கு ஆள் கிடைக்க வில்லை. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறைந்தபட்சம் அ.தி.மு.க. வாக்குகளையாவது வாங்க வேண்டும் என ஒரு ஓட்டுக்கு 2000 என்று 2 லட்சம் வாக்காளர்களுக்கு நாற்பது கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிட்டுள்ளார்.

 

அதற்கு முன்னாள் அமைச்சர்களிடம் நிதி திரட்டி வருகிறார். ஆனால் கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், சி.வி.சன்முகம் போன்றவர்கள் பணம் இல்லை என்று கூறிவிட்டார்கள். தங்கமணி, வேலுமணி, வீரமணி, எடப்பாடி ஆகியோர் சேர்ந்து நாற்பது கோடி ரூபாய் ஓட்டுக்கு கொடுக்க  தயார் செய்து வைத்துள்ளார்கள்.

கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமர் மோடிக்கு எதிராக தி.மு.க. வலுவாகக் குரல் எழுப்பியதை மோடி விரும்பவில்லை. அதனால் தி.மு.க. கூட்டணி கட்சி இந்த தேர்தலில் வெற்றி பெறுவதை எப்படி நிறுத்தலாம் என்கிற ஆலோசனைகள் டெல்லியில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் ஆர்.கே.நகர் மற்றும் வேலூர் தேர்தல்களை பணப் பட்டுவடாவை காரணம் காட்டி மத்திய தேர்தல் கமிஷன் நிறுத்தியது. அதுபோல் ஈரோடு கிழக்கு தேர்தலையும் நிறுத்தி வைக்க ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெறிவித்துள்ளது.

MUST READ