- Advertisement -
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இறுதிகட்ட பிராச்சாரம் செய்துவருகிறார்.
அதிமுக இடைக்கால பொது செயலாளர் பழனிச்சாமி அவர் கட்சியின் வேட்பாளர் தென்னரசை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்தபோது மேளதாளங்கள் முழங்க கையில் அக்கட்சியின் துண்டுகளை சுற்றி தொண்டர்கள் குத்தாட்டம் போட்டதை கூடியிருந்தவர்கள் கண்டு ரசித்தனர்.


இன்று(25.02.2023) மாலை ஆறு மணிக்கு பிரச்சாரம் நிறைவடைநத் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அக்கரகாரம், கருங்கல்பாளையம், காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்ய வந்த மூளப்பட்டறை பகுதியில் மேளதாளங்கள் முழங்க கைகளில் அக்கட்சியின் துண்டுகளை சுற்றி அதிமுகவினர் குத்தாட்டம் போட்டதை அங்கு கூடியிருந்தவர்கள் கண்டு ரசித்தனர்.
