மக்கள் விரோத பாஜக வை கண்டித்து பிப்ரவரி-28 சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்! விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை.

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து கொண்டு வரும் சனாதனத்தை கண்டித்து சென்னையில் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி குழு நடத்திய தலைமை நிர்வாகக் குழுவில் இன்று (22.02.2023) தீர்மானிக்கப்பட்டது.
தோழமைக் கட்சியின் தலைவர்களை இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை செயல்பட விடாமல் முடக்குவதற்காக தமிழ்நாட்டில் திட்டமிட்ட முறையில் பாஜகவும் அதன் துணை அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றனர்
மத வெறி அடிப்படையில் வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதோடு மட்டும் இன்றி சாதி வெறியையும் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
தனிநபர்களுக்கு எதிராகத் தரங்கெட்டுப் பேசுவது, வீம்புக்கு வம்பிழுக்கும் வகையில் வேண்டுமென்றே அரசியல் தலைவர்களுக்கு எதிராக அவதூறுகள் பரப்புவது , ஆத்திரமூட்டும் வகையில் ஆபாசமான விமர்சனங்களின் மூலம் இழிவுபடுத்துவது, தாங்களே தங்களுக்கு எதிராகப் பெட்ரோல் குண்டுகளை வீசிக்கொண்டு வன்முறைகளைத் தூண்டும் வகையில் நாடகமாடுவது, கூலிப்படையினரை ஏவி கொலைகள் செய்வது, ஊடகத்தினரை மிரட்டுவது, பொய்யான செய்திகளைப் சமூக ஊடகங்களில் பரவசெய்து, சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவது போன்ற செயலில் அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றார்கள். இத்தகைய மக்கள்விரோத போக்குகளுக்கு தமிழ்நாடு ஆளுநரும் துணையாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்திய ஒன்றிய அரசின் மறைமுகத்தையும், ஆதரவையும் காட்டும் விதமாக அவரது நடவடிக்கைகள் சனாதன சக்திகளின் வன்முறை போக்குகளுக்கு, மேலும், சமூக விரோதிகளின் துணையோடு எதிர்க்கட்சியினரை மட்டுமின்றி சொந்த கட்சிக்காரர்களையே அவதூறுகளின் மூலம் அச்சுறுத்துவது என்பதை பாஜகவினர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
அது மட்மின்றி அந்த கட்சியின் பெண்களை வெளிப்படையாகவே மிரட்டி வருகின்றனர் (Blackmail) இத்தகைய சமூகவிரோத மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை ஊக்குவிக்கும் ஆளுநர், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.
முக்கியமாக தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்ற வாசகத்தை ஆளுநர் உரையில் படிக்க இருந்த வாசகம் ஒன்றை படிக்க மறுத்தார். இன்றும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து திமுக அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றுவதற்கு வட மாநிலத்தில் செயல்படும் சதி திட்டத்தோடு செயல்ப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சமூக அமைதியையும் சமய நல்லிணக்கத்தையும் காப்பாற்ற வேண்டியது நம் கடமை அதனால் சனாதனப் பயங்கரவாதிகளின் இத்தகைய சதியை முறியடித்து தான் சனாதன சக்திகளுக்கு எதிராக இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீர்மானித்துள்ளது. எனவே, பிப்ரவரி 28- ஆம் நாள் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சனநாயக சக்திகள் திரளாகப் பங்கேற்க வேண்டுமாறு திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
