‘பாமகவை விட வளர்ந்துவிட்டேன்… மீண்டும் ஏன் என்னை பழைய இடத்திற்கே கொண்டு செல்கிறீர்கள்..?” என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”இன்று வரை திமுக கூட்டணியில்தான் தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளது. கூட்டணி குறித்து நான் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தொகுதிக்கான திட்டங்களை நான் சட்டமன்றத்தில் குரல் உயர்த்தி கேட்கிறேன். அதற்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது பாசிச பாஜக அரசின் அடாவடி திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் எதிரான கூட்டணி. புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தாது என அறிவித்துள்ள நிலையில் ஒரு பைசா நிதி தர மாட்டேன் என்று மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஒரு ரூபாய்க்கு 29 பைசாவை எங்களுக்கு பிச்சையாக போடுகிறார்கள். மீதி 90% பணத்தை ஒன்றிய அரசு எடுத்துச் செல்கிறது. இன்றைக்கு மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிற பாசிச பாஜக என்ற கூட்டணி வரக்கூடாது.
அதிமுகவை கூட்டணிக்கு கொண்டு வருவதற்காக எடப்பாடி.பழனிசாமியின் நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. இது எந்த விதத்தில் நியாயம். கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்கும் என கூறுகிறார்கள். இது தான் இந்தியாவை ஆளும் கட்சியின் லட்சணமா? தமிழ் நாட்டில் புயல்கள் வந்தது. ஆனால் தமிழ்நாடு கேட்ட ஆராயிரம் கோடியில் வெறும் 90 ஆயிரம் கோடி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. நிதி இல்லாத காரணத்தினால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க முடியவில்லை. தமிழ்நாட்டின் கடன் 8 ஆயிரத்து 34,000 லட்சம் கோடி கடன் உள்ளது.
தமிழக மக்களின் வரிப்பணத்தை மட்டும் தங்கள் கஜானாவுக்கு திருப்பிக் கொள்கிறது. மோடியும், நிர்மலா சீதாராமனும் தமிழக மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. பாஜக அணியை வீழ்த்துவதற்காக மக்கள் உரிமைப் போராட்டத்தை தான் நடத்துகிறேன். கூட்டணிக்கும் அதற்கு எந்த சம்பந்தமும் இல்லை. அப்படி ஏதேனும் மாற்றம் இருந்தால் பொதுக்குழுவை கூட்டி செய்தியாளரிடம் கண்டிப்பாக கூறுவேன்.
நான் பாமகவை தாண்டி வளர்ந்து விட்டேன். தமிழ்நாடு முழுக்க கொண்டாடும் ஒரு பொது தலைவராக வளர்ந்து விட்டேன். மீண்டும் என்னை என் பழைய இடத்திற்கு கொண்டு போய் நிறுத்துகிறீர்களா?” என ஆதங்கப்பட்டார்.
ன கேள்வி எழுப்பி விடைபெற்று சென்றார்.