Homeசெய்திகள்அரசியல்செயல்பாடு மூலம் விமர்சனங்களுக்கு பதில் அளிப்பேன் - உதயநிதி ஸ்டாலின்

செயல்பாடு மூலம் விமர்சனங்களுக்கு பதில் அளிப்பேன் – உதயநிதி ஸ்டாலின்

-

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உள்ள தர்பார் அறங்கில் பதவியேற்பு விழா நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்று கொண்டார்.

“உதயநிதி ஸ்டாலின் எனும் நான்” பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன் என்றும் தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பு தந்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தள்ளார்.

மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அமைச்சரவையில் மூத்த அமைச்சர்கள் வாிசையில் 10 – வது இடத்தில் தங்கம் தென்னரசுக்கு அடுத்து இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் திமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.

மேலும் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்றும் விமர்சனங்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என உதயநிதி அறிவித்தார்.

தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம், அதனை நிறைவேற்றும் வகையில் நான் செயல்படுவேன் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் மினி ஸ்டேடியம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கம் அளிக்கும் வகையிலும் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் வகையிலும் எனது செயல்பாடுகள் அமையும் என்றார் அமைச்சர் உதயநிதி.

இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என உதயநிதி அறிவித்தார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள மாமன்னன் படமே எனது கடைசி திரைப்படம் என்றும் அவர் கூறினார்.

MUST READ