spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்விஜயின் உயிருக்கு அச்சுறுத்தலா? பாதுகாப்புக் கோரி காவல் நிலையத்தில் புகார்…

விஜயின் உயிருக்கு அச்சுறுத்தலா? பாதுகாப்புக் கோரி காவல் நிலையத்தில் புகார்…

-

- Advertisement -

நடிகர் விஜய் வீட்டில் அத்துமீறி நுழைந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோாி  காவல் நிலையத்தில் நடிகர் விஜய் மேலாளர் புகார் அளித்துள்ளாா்.விஜயின் உயிருக்கு அச்சுறுத்தலா? பாதுகாப்புக் கோரி காவல் நிலையத்தில் புகார்…சென்னை நீலாங்கரை கேசுவரினா டிரைவ் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர் விஜய்யின் வீட்டின் மாடியில் பதுங்கி இருந்துள்ளார். நடிகர் விஜய் மாடியில் அமர்ந்திருந்த நபரை பார்த்து உள்ளார். உடனடியாக அந்த நபர் விஜயை கட்டிப்பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. வீட்டில் யாருக்கும் தெரியாமல் நுழைந்து சாப்பிடாமல் இரவு முழுவதும் வீட்டிலேயே இருந்து கொண்டு விஜயை பார்ப்பதற்காக அந்த நபர் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

அவர் நடந்து கொண்ட விதத்தை பார்க்கும் பொழுது சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போலும் தெரிந்தது. விசாரணையில்  மதுராந்தகத்தைச் சேர்ந்த அருண் என்பது தெரிய வந்தது. விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் எப்படி அந்த நபர் வீட்டிற்கு நுழைந்தார் என்ற கேள்வி சந்தேகம் தவெகவின் மூத்த நிர்வாகிகளுக்கு எழுந்துள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சி ஆர் பி எப் தரப்பிலிருந்து கேட்டுக் கொண்டதன் அடிப்படையில்,வெடிகுண்டு நிபுணர்கள் நேரில் வந்து வீடு முழுவதும் சோதனை நடத்தினர். இந்நிலையில் வீடு சுற்றிலும் சென்னை போலீசாரின் பாதுகாப்பை கேட்க தவெக தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

we-r-hiring

ஏற்கெனவே பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்குள்ளும் அடையாளம் தெரியாத நபர் நுழைந்த சம்பவத்திற்கு பிறகு தற்போது விஜய் வீட்டிற்குள்ளே நுழைந்து இருப்பது தவெக மூத்த நிர்வாகிகளுக்கு விஜயின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சந்தேகத்தை கிளப்பி உள்ளனர். இதனால் ஒய் பிரிவு பாதுகாப்பு தனிப்பட்ட முறையில் இருந்தாலும், வீட்டை சுற்றி பாதுகாப்பு வழங்க சென்னை போலீசாரிடம் பாதுகாப்பு தவெகவினர் முடிவு செய்து உள்ளனர். இந்நிலையில் வீட்டில் பதுங்கி இருந்த நபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பிறகு நடிகர் விஜயின் வீட்டில் அத்துமீறி நுழைந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் மேலாளராக இருக்கும் வெங்கடேசன் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சந்தேகங்களின் அடிப்படையில் உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் தான் வீட்டில் நுழைந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற அடிப்படையில், விஜயின் மேலாளர் அளித்த புகாரை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்களின் கையெழுத்து நமது நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஆயுதம் – பிரியங்கா காந்தி

MUST READ