காங்கிரஸ் கட்சி நடத்தும் ‘வாக்குத்திருட்டு கையெழுத்து பிரச்சாரத்தில்’ அனைவரும் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்!
பீகார் மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கை மற்றும் முன்பு நடைபெற்ற கர்நாடக, மகாராஷ்டிரா உள்ளிட்ட சட்டமன்ற தேர்தல்களின் போது போலி வாக்காளர்கள் பதிவு உள்ளிட்ட விவகாரங்களை எல்லாம் மையப்படுத்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சி வாக்கு திருட்டு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நாட்டு மக்கள் அனைவரும் சேர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என காங்கிரஸ் கேட்டுக் கொண்ட நிலையில், கையெழுத்து பிரச்சாரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒவ்வொரு வாக்குகளை போல இப்போது நாம் செலுத்தும் ஒவ்வொரு கையெழுத்தும் முக்கியமானது எனக் கூறியுள்ள பிரியங்கா ஒருவருக்கு ஒரு வாக்கு என்பதை நமது ஜனநாயக கொள்கையை பாதுகாக்கும் என்பதால் அதனை நாம் பாதுகாக்க மக்கள் அனைவருடைய ஆதரவும் தேவை என பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் நாட்டு மக்கள் அனைவரும் செலுத்தும் ஒவ்வொரு கையெழுத்தும் தனி நபரின் வாக்குரிமையையும் துடிப்பான நமது நாட்டின் ஜனநாயகத்தையும் நம்முடைய அரசியல் அமைப்பையும் பாதுகாக்கப் போராடும் போராட்டத்திற்கு உத்வேகம் அளிக்கும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.