Homeசெய்திகள்அரசியல்தேர்தல் நடந்தால் யார் முதல்வர்..? அடிச்சுத் தூக்கும் மு.க.ஸ்டாலின்- இ.பி.எஸுக்கு மரண அடி- சி-வோட்டரில் அதிர்ச்சி..!

தேர்தல் நடந்தால் யார் முதல்வர்..? அடிச்சுத் தூக்கும் மு.க.ஸ்டாலின்- இ.பி.எஸுக்கு மரண அடி- சி-வோட்டரில் அதிர்ச்சி..!

-

- Advertisement -

டாஸ்மாக் ஊழல் VS எல்லை மறுவரையறை, மும்மொழி திணிப்பு என மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே பரபரப்பான அரசியல் நிலவி வரும் நிலையில், இப்போது தேர்தல் நடந்தால், தமிழக முதல்வராக யார் வருவார்கள்? என சி- ஓட்டர் கருத்துக்கணிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்த கணக்கெடுப்பின் முடிவுகள், பதிலளித்தவர்களில் 27 சதவீதத்தினர் முதல் தேர்வாக தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்வு செய்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நான்காவது இடம் பிடித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக  தலைவருமான விஜய் 18 சதவீத மக்களின் விருப்பத்துடன் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும், எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி  பழனிசாமி 10 சதவீத மக்களின் விருப்பத்துடன் மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 9 சதவீத மக்களின் விருப்பத்துடன் நான்காவது இடத்தில் இருப்பதாகவும் கணக்கெடுப்பு கூறுகிறது.ஜெகபர் அலி  இறப்புக்கு நீதி வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி

சி.வோட்டரின் சமீபத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி முதல்வர் ஸ்டாலினின் தலைமைத்துவம், அவரது நிர்வாகத்தின் காரணமாக அவர் முதலிடத்தில் உள்ளார். அவர் தொடர்ந்து தமிழ் மொழியின் உரிமை பிரச்சினையை எழுப்பி வருகிறார். மத்திய அரசின் முன் தலைவணங்கவில்லை. இது அவரின் மதிப்பீடுகளை அதிகரித்துள்ளது. விஜய் இரண்டாவது இடத்தில் இருப்பது அவரின் வளர்ந்து வரும் அரசியல் ஈர்ப்பை உறுதி செய்கிறது.அவரது கட்சி இன்னும் முறையான தேர்தலை அனுகவில்லை. இருந்தபோதும், அவர் மக்களின் இரண்டாவது தேர்வாக உருவெடுத்துள்ளார்.

அடுத்த ஆண்டு மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஸ்டாலினின் அரசில் எத்தனை சதவீத மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்? இந்த கணக்கெடுப்பில், தமிழக அரசின் பணிகளும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதில், 15 சதவீத மக்கள் அரசின் செயல்பாடுகள், செயல்திறனில் மிகவும் திருப்தி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் 36 சதவீதம் பேர் ஓரளவு திருப்தி அடைந்துள்ளனர். 25 சதவீதம் பேர் திருப்தி அடையவில்லை. 24 சதவீதம் பேர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

2026 ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நிச்சயம்... அடித்துச் சொல்லும் அண்ணாமலை!

மு.க. ஸ்டாலினின் செயல்திறனில் மிகவும் திருப்தி அடைவதாக 22 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதே நேரத்தில் 33 சதவீதம் பேர் “ஓரளவு திருப்தி அடைவதாக” தெரிவித்துள்ளனர். 22 சதவீதம் பேர் “திருப்தியடையவில்லை” என்றும், 23 சதவீதம் பேர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக்கணிப்பில் மு.க.ஸ்டாலின் மிகவும் விரும்பப்படும் தலைவராக தொடர்ந்து இருப்பதைக் காட்டுகின்றன.

MUST READ