spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது - அழகிரி

காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது – அழகிரி

-

- Advertisement -

காங்கிரஸ் அல்லாத கூட்டணி கரை சேராது என்று முதலமைச்சர் சொல்லி இருப்பது ஆழம் நிறைந்தது. காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி அளித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உடன் இன்று காலை சிற்றுண்டி நேரத்தை தமிழக காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மாநில தலைவர் கே எஸ் அழகிரி கலந்து கொண்டார்.

அவருடன் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், கே வி தங்கபாலு , எம்பிக்கள் ஜோதிமணி ,ஜெயக்குமார், மற்றும் சிறுபான்மை நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டு உணவு கொண்டனர்.

we-r-hiring

மேலும் தமிழகத்தின் முக்கிய நபர்கள் இந்த நேரத்தில் சந்தித்து கட்சி தொடர்பாக முக்கிய ஆலோசனைகளும் மேற்கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் கே எஸ் அழகிரி, ராகுல் காந்தியின் இந்தியா நடை பயணமும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுடைய மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

தமிழ்நாடு அரசாங்கம் 5 ஆண்டுகளுக்கு கொடுத்த உறுதி மொழியை 80 சதவிகிதத்திற்கு மேல் இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றி இருக்கிறது, மக்களுடைய அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன, கழிவுநீர் அல்லாத குடிநீர், மின்சாரம் மக்களுக்கு கிடைக்கிறது. எனவே இந்த அரசு மக்கள் இயக்கமாக இருக்கிறோம்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பொருத்தவரை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டனிக்கு நிச்சயம் வெற்றி என்று உண்டு. அதிமுக அவர்களுடைய அணியையே ஒழுங்குபடுத்த முடியவில்லை, எனவே சஞ்சலத்தில் இருக்கிற தன்னம்பிக்கை இல்லாத ஒரு கட்சியை மக்கள் விரும்பமாட்டார்கள்.

“காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது” என முதலமைச்சர் சொல்லியிருப்பது ஆழம் நிறைந்தது. இந்தியா முழுவதும் எதிரொலித்துள்ளது. அற்புதமான வார்த்தையை அறைகூவலாக, பிரகடனமாக சொல்லியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின், இது ஒரு பொதுவான கருத்து மூன்றாவது அணியை மக்கள் விரும்ப மாட்டார்கள், ஒத்த கருத்துடன் உள்ள கட்சிகளை கூட்டணிக்குள் ஒருங்கிணைப்போம்.

கேஸ் சிலிண்டர் விலையை பிரதமர் மோடி தொடர்ந்து உயர்த்துகிறார். அவரின் பொருளாதார கொள்கை என்ன? அவர் தான் விளக்க்கம் தர வேண்டும்.

இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை உயரும் பொழுது தான் பெட்ரோல், டீசல் விலை, கேஸ் சிலிண்டர் விலையும் உயரும். ஆனால் மோடி அரசாங்கம் அதானிக்கு இந்தியாவை தாரை வார்த்து கொடுத்துள்ளது. அதானி குடும்பம் வாழ்கிறது இந்தியா விழுகிறது.

இதுவே அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்திற்கான காரணம். மேலும்
அதானி தவறு செய்துள்ளளார். அவரது நிறுவனம் தவறு செய்துள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

MUST READ