Homeசெய்திகள்அரசியல்பிரதமர் மோடி சென்னை வருகை – 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

பிரதமர் மோடி சென்னை வருகை – 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

-

- Advertisement -

பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், அதிமுக பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக, 2 நாட்கள் பயணமாக, நாளை வெள்ளிக்கிழமை, டெல்லியில் இருந்து தனி விமானத்தில், சென்னை வருகிறார். இதனால், பழைய விமான நிலைய பகுதி முழுவதும், முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.பிரதமர் மோடி சென்னை வருகை – 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்கத் தடைபிரதமர் வருகையொட்டி, டெல்லியில் இருந்து வந்த சிறப்பு பாதுகாப்பு குழுவினர், சென்னை பழைய விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, நாளை வெள்ளிக்கிழமை, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, மாலை 3.20 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையம் வந்து சேர்கிறார். சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து, உடனடியாக, மாலை 3.25 மணிக்கு,தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு, புதுச்சேரி செல்கிறார்.

we-r-hiring

புதுச்சேரி மாநிலத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு, மாலை 6.40 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து, காரில் புறப்பட்டு, கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலுக்கு சென்று இரவு தங்குகிறார்.

அதன் பின்பு மறுநாள் 4 ஆம் தேதி சனிக்கிழமை, காலை 11 மணியில் இருந்து, பகல் 12 மணி வரை, கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில், பாஜக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடுகிறார். அதன்பின்பு பகல் 1.10 மணிக்கு, ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் இருந்து, காரில் புறப்பட்டு, பகல் 1.20 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்.

சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து, தனி விமானத்தில், கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமரின் 2 நாட்கள் சென்னை பயணத்தை ஒட்டி, சென்னை விமான நிலையத்தில், குறிப்பாக பழைய விமான நிலைய பகுதி முழுவதும், முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர், சென்னைக்கு வந்து, சென்னை விமான நிலையத்தில் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, ஆலோசனை மேற்கொண்டனர்.

அப்போது  ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பு நலன் கருதி, வானில் மாலை 6 மணிக்கு மேல் பறக்க கூடாது என்ற  விதிமுறை இருப்பதை, அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். ஆனால் இப்போது மாலை 6.30 மணிக்கு மேல் தான், சூரியன் அஸ்தமித்து, வெளிச்சம் குறைய தொடங்குகிறது. எனவே பிரதமர் ஹெலிகாப்டர் மாலை 6.30க்குள், சென்னையில் வந்து பாதுகாப்பாக தரை இறங்கி விடலாம் என்று பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அதோடு சென்னை பழைய விமான நிலையத்தில் பிரதமரின் தனி விமானம் வந்து நிற்கும் இடம், அதன்பின்பு ஹெலிகாப்டர் நிற்கும் இடம், பிரதமர் விமான நிலையத்தில் இருந்து காரில் ஜிஎஸ்டி சாலையில் கிண்டி நட்சத்திர ஓட்டலுக்கு புறப்பட்டு செல்லும் வழி போன்றவைகளையும் டெல்லியில் இருந்து வந்த சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

மகளிர் உரிமைதொகை ரூ.3000… பாஜக அறிக்கையில் அதிரடி வாக்குறுதிகள்

MUST READ