பெண்களை கவரும் வகையில் ”அருணோதய்” திட்டத்தில் மகளிருக்க வழங்கப்படும் உதவித்தொகை ரூ.3000 கே உயர்த்தப்படும் என அசாமில் பாரதிய ஜனதாக கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
அசாம் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அவை, ‘பொது சிவில் சட்டம்’ அமல்படுத்தப்படும் என்றும், ‘லவ் ஜிஹாத்’க்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆறாவது அட்டவணை பகுதிகளுக்கு இந்த சட்டங்களில் விலக்கு அளிக்கப்படும் என முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.

பெண்களை கவரும் வகையில் ‘அருணோடோய்’ திட்ட உதவி தொகை ரூ.1,250 இலிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 40 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.25,000 வழங்கி ‘லட்சாதிபதி திதி’களாக உருவாக்கப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் அசாமின் பொருளாதார வளர்ச்சி 3.3 மடங்கு உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அசாம் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.
பீகார்: கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்…
