மீண்டும் துவங்கும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொள்ள அகிலேஷ் யாதவ் மற்றும் மாயவதிக்கு ராகுல்காந்தி அழைப்பு.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய ஒற்றுமை யாத்திரை 9 மாநிலங்கள், 46 மாவட்டங்களை கடந்தார். கடந்த 24ம் தேதி டெல்லி செங்கோட்டையை சென்றடைந்தார். சிறிய இடைவேளைக்கு பிறகு ஜனவரி 3ம் தேதி மீண்டும் ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ பயணத்தை தொடங்கவுள்ளார். மீதமுள்ள 448 கிலோமீட்டர் தூர நடைபயணம் உத்திரபிரதேசம், பஞ்சாப் வழியாக ஜம்மு காஷ்மீரில் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று நிறைவடைய உள்ளது.


இந்நிலையில் ஜனவரி 3ம் தேதி ஓய்வுக்கு பிறகு மீண்டும் தொடங்கும் யாத்திரையில் உத்திரபிரதேச மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ஆகியோர் கலந்து கொள்ள ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.