இந்தியா கூட்டணி கட்சி பதவி ஏற்குமா ?
18-வது பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்டம் வருகிற 24 ஆம் தேதி துவங்குகிறது. ஜூலை 3 ஆம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறும்.
இந்த கூட்டத் தொடரில் முதல் நாளில் தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு எம்.பி.க்கள் பதவியேற்க ,எம்.பி.க்கள் பதவியேற்புக்கு பிறகு 26-ந் தேதி சபாநாயகர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த மக்களவையில் எதிர்கட்சிகள் ஆளும் கூட்டணிக்கு இணையாக உள்ளன. 293 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. 240 இடங்கள் பாஜகவுக்கு கிடைத்தது. தனிப்பெரும்பான்மை பெறாததே கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பாஜக ஆட்சி அமைக்கும் நிலை.
234 உறுப்பினர்கள் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு உள்ளனர். இந்நிலையில் துணை சபாநாயகர் பதவியை தங்களுக்கு விட்டு கொடுக்க வேண்டும், ஒரு வேலை தரமறுத்தால் சபாநாயகர் தேர்தலில் போட்டியிட இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா கூட்டணியில் 234 எம்.பி.க்கள் இருப்பதால் துணை சபாநாயகர் பதவியை பெற்றுவிட வேண்டும் என்று விரும்புகிறது.
சபாநாயகர் அவையில் இல்லாத நேரத்தில் துணை சபாநாயகர் அவையை நடத்துவார். இந்தியா கூட்டணி இதனால் தான் பதவியை பெறுவதில் தீவிரமாக இருக்கிறது.
ஆனால் பா.ஜ.க சபாநாயகர் பதவியை தாங்களும், கூட்டணி கட்சிகளான தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதா தளத்தை திருப்திபடுத்துவதற்காக துணை சபாநாயகர் பதவியை கூட்டணி கட்சிக்குக்கும் வழங்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.
பா.ஜ.க அந்த பதவியை கொடுக்காவிட்டால் எதிர்க்கட்சிகள் சபாநாயகர் தேர்தலில் போட்டியிட உள்ளது. அதே போன்று ஒருமனதாக சபாநாயகரை தேர்வு செய்ய நினைக்கும் பா.ஜ.க -வின் முயற்சிக்கு இந்தியா கூட்டணி தடையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏ -லிஸ்ட் நடிகர்களுடன் அப்படி இருக்கும் படி வற்புறுத்தினார்கள்….. பிரபல நடிகை வேதனை!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாரதிய ஜனதா கட்சித் தலைவரும் ஏழு முறை உறுப்பினருமான பர்த்ருஹரி மஹ்தாப் என்பவரை நியமித்துள்ளார், அவர் கீழ்சபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்குப் பதவிப்பிரமாணம் மற்றும் உறுதிமொழியை எடுத்துரைத்து தேர்தலுக்குத் தலைமை தாங்குகிறார்.
லோக்சபாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதில் தற்காலிக சபாநாயகர் மஹ்தாப் அவர்களுக்கு உதவுவதற்காக சுரேஷ் (காங்கிரஸ்), டிஆர் பாலு (திமுக), ராதா மோகன் சிங் மற்றும் ஃபக்கன் சிங் குலாஸ்தே (பிஜேபி) மற்றும் சுதிப் பந்தோபாத்யாய் (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகிய ஐந்து மூத்த உறுப்பினர்களையும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் நடைமுறைகள் மற்றும் மரபுகளை மீறி இருப்பதாகவும், இடைக்கால சபாநாயகர் பதவிக்கான எட்டு முறை உறுப்பினரான சுரேஷின் உரிமையை புறக்கணித்ததாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஜனாதிபதி குறிப்பிட்ட உறுப்பினர்கள் குழுவில் சேரக்கூடாது என்று எதிர்க்கட்சி வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்துள்ளன.
மக்களவையில் உதவி தற்காலிக சபாநாயகர் பொறுப்பு பதவியை நிராகரிப்பதாக இந்தியா கூட்டணி அறிவித்துள்ளது. தேர்தலுக்குப் பின் மக்களவையின் முதல் கூட்டம் நாளை தொடங்குகிறது அதில் புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகரான பாஜக எம்.பி பர்த்ருஹரி பதவிப்பிரமாணம் செய்துவைக்க உள்ளார். இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகள் உதவி தற்காலிக சபாநாயகர் பொறுப்பு பதவியை நிராகரிப்பதாக தற்போது நாடாளுமன்ற விவகார துறைக்கு கடிதம் எழுதியுள்ளன என செய்திகள் வெளியாகிறது.