Homeசெய்திகள்அரசியல்அரசியல் நாகரிகம் மற்றும் மாண்பு குறைந்துவிட்டது: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை!

அரசியல் நாகரிகம் மற்றும் மாண்பு குறைந்துவிட்டது: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை!

-

- Advertisement -

தற்போதைய அரசியல் சூழலில் நாகரிகமும், அரசியல் மாண்புகளும் பெருமளவில் குறைந்துவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராஜரின் நினைவு/புகழஞ்சலி நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது:

சீமான்

we-r-hiring

அன்றைய அரசியல் மாண்பு:

“முன்னாள் முதலமைச்சர் காமராஜர் விருதுநகரில் தேர்தலில் தோற்றபோது, பேரறிஞர் அண்ணாவிடம் சென்று ‘காமராஜர் தோற்றுவிட்டார்’ என்று ஒருவர் மகிழ்ச்சியுடன் கூறினார். ஆனால், பேரறிஞர் அண்ணாவோ கண் கலங்கி, ‘மகிழ்ச்சியடையாதே… காமராஜர் போன்ற ஒரு மகத்தான மக்கள் தலைவனுக்கே இந்த நிலைமை என்றால், நமக்கெல்லாம் என்ன நிலைமை ஏற்படும் என்று சிந்தித்துப் பார்’ எனக் கூறி வருந்தினார். மாற்றுக்கட்சித் தலைவரின் தோல்விக்குக் கூட வருந்திய அரசியல் பண்பாடு அன்று இருந்தது.

அதேபோல், பேரறிஞர் அண்ணாவைச் சந்திக்க அமெரிக்க அதிபர் நிக்சன் மறுத்தபோது, இந்தியா வந்த நிக்சனைச் சந்திக்க காமராஜரும் மறுத்து தனது தலைவனுக்கு ஆதரவாக நின்றார். ஆனால், இன்றோ அடுத்தவரின் தோல்வியைக் கண்டு கைதட்டிச் சிரிப்பதும், ஏளனம் செய்வதுமான அரசியல் நாகரிகமற்ற சூழல் நிலவுகிறது.

காமராஜர் எங்களுக்குப் படிப்பினை:

பெருந்தலைவர் காமராஜர் எங்களுக்கு வெறும் படம் அல்ல; அவர் எங்களுக்குப் படிப்பினை, பாடம் மற்றும் வரலாற்றுப் பெருந்தடம். ஆண்டிற்கு ஒருமுறை அவரது படத்திற்கு மாலை அணிவித்துச் செல்லும் கூட்டம் நாங்களல்ல. அவருடைய நேர்மையான வழியில் பயணித்து நாட்டையும் மக்களையும் நல்வழிப்படுத்துவதே நோக்கமாகும்.

அரசியல் தெளிவு அவசியம்:

இன்றைய தலைமுறையினர் பாடப்புத்தகங்களை மட்டும் படிப்பது போதாது; சூழலியல், பொருளியல் மற்றும் அரசியல் வாழ்வியல் சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். மனிதனின் பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் வரை அனைத்தையும் தீர்மானிப்பது அரசு தான்; அந்த அரசைத் தீர்மானிப்பது அரசியல். எனவே, இளைஞர்கள் அரசியலை ஆழமாகக் கற்றுத் தெளிவு பெற வேண்டும். இல்லையெனில், ஒரு பதறான சமூகமாக நாம் மாறிவிடுவோம்,” என்று சீமான் பேசினார்.

MUST READ