spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர் பட்டியல் வெளியீடு

தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர் பட்டியல் வெளியீடு

-

- Advertisement -

தமிழக வெற்றிக்கழகதின் மாவட்ட செயலாளர் நியமனம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றதில் கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்டு இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளாா்.தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர் பட்டியல் வெளியீடு

தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களின் பட்டியல் பின்வருமாறு –

we-r-hiring

சென்னை புறநகர் – சரவணன்

தென் சென்னை தெற்கு – தாமு

புதுக்கோட்டை – பர்வேஸ்

நாகபட்டினம் – சுகுமார்

தர்மபுரி மேற்கு – எம்.சிவன்

தென் சென்னை வடக்கு – க.அப்புனு

கள்ளக்குறிச்சி மேற்கு – பிரகாஷ்

கன்னியாகுமரி மத்திய மாவட்டம் – கிருஷ்ணகுமார்

கன்னியாகுமரி மேற்கு – சபின்

கன்னியாகுமரி கிழக்கு – மாதவன்

அம்பத்தூர் – பாலமுருகன்

மதுரை கிழக்கு – விஜய் அன்பன்

மதுரை தெற்கு – தங்கபாண்டி ,  தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களிடையே  விஜய் கூறியிருப்பதாவது – உங்களை நம்பி மக்களுக்காக இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இனி நீங்கள் தான் இதன் வளர்ச்சியை பார்த்துக் கொள்ள வேண்டும்…

இது குறித்து அவர் இத்தனை ஆண்டுகளாக  விஜய் மக்கள் இயக்கமாக இருந்த போதும் எனக்காக துணை நின்று என்னுடன் உழைத்தீர்கள் பயணித்தீர்கள். உங்களது நீண்ட கால கோரிக்கை எப்படி நாம் தற்போது கட்சியை தொடங்கி சிறப்பாக பயணத்தை தொடர்ந்து வருகிறோம். உங்களை நம்பி மக்களுக்காக இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இனி நீங்கள் தான் இதன் வளர்ச்சியை பார்த்துக் கொள்ள வேண்டும். முன்பு நாம் மக்களுக்கு சேவை ஆற்றியதை விட இனிவரும் காலங்களில் கடுமையாக உழைக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து பயணிப்போம் நிச்சயம் 2026 ஆம் ஆண்டு வெற்றி பெறுவோம் என கூறினாா்.

இந்த வருடம் விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு அதிரடி ட்ரீட்…. என்னன்னு தெரியுமா?

 

MUST READ