தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
ஹைதராபாத் மெட்ரோ ரயில் விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. அத்துடன், தெலுங்கானாவின் காங்கிரஸ் கட்சியின் கடைசி முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி இருப்பார் என்று எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஹைதராபாத் தெலுங்கானா காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில், குஜராத்தில் காங்கிரஸ் அரசு நடத்திய சாதி கணக்கெடுப்பு குறித்த பவர்பாயிண்ட் விளக்கக்காட்சியின் போது பேசிய அவர், ”தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறுகையில், ”கடைசி முதலமைச்சராக இருப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால்,பிரதமர் மோடி பிறப்பால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல. அவரது மனநிலை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரானது.தேவைப்பட்டால் மோடிக்கு எதிராக ஆளும் காங்கிரஸ் போராட்டம் நடத்தும்.
மோடி குஜராத் முதல்வராவதற்கு முன்பு அவரது சாதி முற்போக்கு சாதி.மோடி ஜி தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறுகிறார். உண்மையில் மோடிஜி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல. அவர் சட்டப்பூர்வமாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக (BC) மாற்றப்பட்டுள்ளார்.
மோடி முதலமைச்சரான பிறகு, தனது சமூகத்தை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் சேர்க்க ஒரு சட்டத்தை இயற்றினார். மோடியின் சான்றிதழில் தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தாலும், அவரது மனநிலை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரானது. மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றால், 2021-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏன் நடத்தப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகை ஏன் கண்டறியப்படவில்லை.
சாதி கணக்கெடுப்பு தரவுகளில் பிழைகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.பொது மக்கள் தொகை கணக்கெடுப்பின் கீழ் மையம் சாதி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். பாரத ராஷ்டிர சமிதி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியவை தங்கள் சுயநல நோக்கங்களுக்காக சாதி கணக்கெடுப்பு தரவுகளில் குறைபாடுகளைக் கண்டறிய முயற்சிக்கின்றன. தரவுகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிய பாஜக முயற்சிக்கிறது. ஏனெனில், நாடு முழுவதும் சாதி கணக்கெடுப்பை நடத்தவில்லை என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் நாடாளுமன்றத்தில் ஏற்கனவே குற்றம் சாட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் மேலும் அழுத்தம் கொடுக்கப்படும்.
பீகார், குஜராத் போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் 42 பைசா கிடைக்கும். ஒரு ரூபாய் கொடுத்தால், பீகாருக்கு ஏழு ரூபாய் கிடைக்கும். உத்தரப்பிரதேசத்திற்கு மூன்று ரூபாய் கிடைக்கிறது. தெலுங்கானா என்ன பாவம் செய்தது? ஒரு ரூபாய் கொடுத்தால், நமக்கு 42 பைசா கிடைக்கிறது. மோடி ஜி, நீங்கள் எங்கள் நிதியிலிருந்து 58 பைசாவை எடுத்துக்கொள்கிறீர்கள்” எனக் குற்றம்சாட்டினார்.
இதற்கிடையில், பிரதமர் மோடி பிறப்பால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல என்ற ரேவந்த் ரெட்டியின் விமர்சனத்துக்கு பதிலளித்த மத்திய நிலக்கரி அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, ”முதல்வர் பதவியில் இருப்பவர் இதுபோன்ற கருத்தை வெளியிடுவது பொருத்தமற்றது.பிரதமர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரா இல்லையா என்பது குறித்து பொது விவாதத்திற்கு வரவேண்டும் என ரேவந்த் ரெட்டிக்கு சவால் விடுத்தார். காங்கிரஸ் கட்சி மாநிலத்திலும் நாடு முழுவதும் பொதுமக்களின் ஆதரவை இழந்து வருவதால், ரேவந்த் ரெட்டி இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்து வருவதாக அவர் கூறினார். மோடிக்கு ரேவந்த் ரெட்டியின் கொடுக்கும் சான்றிதழ் தேவையில்லை என்று மத்திய அமைச்சர் கூறினார்.
அதே நேரத்தில், மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார், ”காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சாதி, மதம் ரேவந்த் ரெட்டிக்கு தெரியுமா? பிரதமரின் சாதி குறித்து ரேவந்த் ரெட்டி பேசுவது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வாக்குறுதியில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப காங்கிரஸ் கட்சியின் மற்றொரு அவநம்பிக்கையான உத்தி” என்று அவர் தெரிவித்தார்..