Homeசெய்திகள்அரசியல்தவெக தலைவர் விஜய்க்கு இரண்டு நாளில் ஒரு வயது குறைந்துள்ளது!

தவெக தலைவர் விஜய்க்கு இரண்டு நாளில் ஒரு வயது குறைந்துள்ளது!

-

- Advertisement -

பெரம்பூரில் ஒரு வயதையும்,  திருச்சியில் ஒரு வயதையும் என வயது விவரத்தை மாற்றி வேட்பு மனுவில் விஜய் தாக்கல் செய்துள்ளாா்.தவெக தலைவர் விஜய்க்கு இரண்டு நாளில் ஒரு வயது குறைந்துள்ளது!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

we-r-hiring

இதற்காக கடந்த 30 ஆம்  தேதி பெரம்பூரில் விஜய்  வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சாரத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தான் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியிலும் நேற்றைய தினம் அதாவது ஏப்ரல் இரண்டாம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்து பிரச்சாரம் மேற்கொண்டார்.தவெக தலைவர் விஜய்க்கு இரண்டு நாளில் ஒரு வயது குறைந்துள்ளது!பெரம்பூரில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தன் மீதுள்ள வழக்குகளை மறைத்தும் திருச்சியில் இரண்டு வழக்குகள் உள்ளதாகவும் விஜய் குறிப்பிட்டு இருந்தது சர்ச்சையான நிலையில், தற்பொழுது அவருடைய வயது விவரம் தொடர்பான தவறான தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பெரம்பூரில் 30 ஆம் தேதி தாக்கல் செய்த வேட்பு மனுவில் 52 வயது எனவும், திருச்சி கிழக்கில் ஏப்ரல் 2ல் 51வயது எனவும் தன்னுடைய வயது விவரங்களை விஜய் வழங்கியுள்ளார். இதனால் இரண்டே நாட்களில் ஒரு வயது குறைந்து விட்டதா? இதைக் கூட ஒரு கட்சியின் தலைவர் கவனிக்க மாட்டாரா என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

பெரம்பூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு – தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

 

 

MUST READ