Homeசெய்திகள்அரசியல்ஹெச்.ராஜாவை ஓட ஓட விரட்டியடித்த பாஜகவினர்!

ஹெச்.ராஜாவை ஓட ஓட விரட்டியடித்த பாஜகவினர்!

-

- Advertisement -

ஹெச்.ராஜாவை ஓட ஓட விரட்டியடித்த பாஜகவினர்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வருகை தந்த ஹெச்.ராஜா வை தடுத்து பாஜகவினரே திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

எச்.ராஜா

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நேற்று பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக கூட்டுறவு துறை பிரிவு மாநில செயலாளர் பாலரவிராஜன் என்பவர் கட்சியினருடன் மணி மந்திர விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைக்கு செய்திருந்தார். அதற்காக இரவு ஏழு மணி அளவில் ஹெச். ராஜா வந்தார். அவருக்கு பால ரவிராஜன் தலைமையில் பாஜகவினர் வரவேற்பு அளித்து அழைத்து வந்தனர். ஆனால் சிவகங்கை மண்டல தலைவரும் திருப்புவனம் ஒன்றிய தலைவருமான மோடி பிரபாகரனிடம் எந்த ஒரு தகவலும் சொல்லவில்லை. அவரை அழைக்கவும் இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த மோடி பிரபாகரன் தனது ஆதரவாளர்களுடன் ஹெச். ராஜாவை சாமி கும்பிட விடாமல் தடுத்து காரை மறித்தார். இதனால் காரை விட்டிறங்கி சாமி கும்பிட வந்த ஹெச்.ராஜா மீண்டும் காரில் ஏறினார். அப்போது பாலரவிராஜன் ஹெச்.ராஜாவிடம் விளக்கமளித்து கொண்டிருந்த போது மோடி பிரபாகரன் அவரை அடிக்க பாய்ந்தார். போலீசார் தடுத்து பிரபாகரனை இழுத்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஹெச்.ராஜா நிர்வாகிகளை திட்டினார். போலீசார் அனைவரையும் சமாதானம் செய்து ஹெச்.ராஜாவை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். பாஜகவினர் மோதலால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.

Senior BJP leader H Raja upsets over Thirupuvanam Party Functionaries Infighting

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வந்த ஹெச் ராஜா புலம்பியவாறு காரில் திரும்பி சென்று விட்டார். ஹெச். ராஜா முன்னிலையிலேயே மோடிபிரபாகரனும், பாலரவிராஜனும் ஒருவருக்கு ஒருவர் அடிக்க பாய்ந்ததும் மல்லுகட்டியதும் பரபரப்பை ஏற்படுத்தியது,

MUST READ