spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்செங்கோட்டையன் கிளப்பிய சர்ச்சை... விதிகளை தலைகீழாக மாற்றிய எடப்பாடியார்..!

செங்கோட்டையன் கிளப்பிய சர்ச்சை… விதிகளை தலைகீழாக மாற்றிய எடப்பாடியார்..!

-

- Advertisement -

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது, அதிமுக சார்பில் வைக்கப்படம் பேனர்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களைத் தவிர வேறு யார் படங்களும் இடம்பெறாது. இதற்கான கட்டுப்பாட்டை விதித்தவர் ஜெயலலிதா. அவர் மறைவிற்குப் பிறகு, கட்சி நிர்வாகிகள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப புகைப்படங்களை வைத்து பேனர்களை ரோட்டில் வைத்து வருகின்றனர்.

we-r-hiring

இந்நிலையில், அதிமுக சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு வைக்கப்படும் பேனர்களில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தலைவர்களின் புகைப்படங்கள் எந்தெந்த சைஸில் இருக்க வேண்டுமென்கிற அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.

அவிநாசி – அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்தியதற்காக, கடந்த மாத துவக்கத்தில், கோவை மாவட்டம் அன்னூரில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பாராட்டு விழா நடத்தப்பட்டது.

அதற்கான அழைப்பிதழிலும், மேடையிலும் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., – ஜெ., புகைப்படங்கள் இடம் பெறவில்லை என்கிற காரணத்தை சுட்டிக்காட்டி, அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அதனால், அதிமுக-வுக்குள் சலசலப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து, பொதுக்கூட்டங்களில், எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொது செயலாளர் என்றே செங்கோட்டையன் குறிப்பிடுகிறார். பெயரை குறிப்பிடுவதில்லை. ஈரோட்டில் நடந்த விழா மேடையில், எடப்பாடி பழனிசாமிக்கு நிகராக செங்கோட்டையன் படம் அச்சிடப்பட்டு இருந்தது.

sengottaiyan

பொதுக்கூட்ட மேடைகளில், தன்னுடைய அனுபவத்தையும், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ.,வுடனான நெருக்கத்தையும் தவறாமல் செங்கோட்டையன் பதிவு செய்கிறார். இது, கட்சிக்குள் பேசு பொருளானது.

செங்கோட்டையன் செயல்படும் விதம், அவரது பேச்சு குறித்து, கட்சியின் பொது செயலாளரான எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கவில்லை. கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேநேரம், எடப்பாடி பழனிசாமிக்கு நிகராக, செங்கோட்டையன் படம் அச்சிடுவது, நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது.

இதைத்தொடர்ந்து, கட்சி சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பேனர்கள் வைக்கும்போது, நிர்வாகிகளின் புகைப்படங்களை எந்தெந்த சைஸில் அச்சிட வேண்டும் என்கிற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு ஜூன் 27க்கு ஒத்திவைப்பு

இது பற்றி அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ‘‘அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பேனர், போஸ்டர் அச்சடிக்கும்போது, எத்தகைய நடைமுறை பின்பற்ற வேண்டுமென்கிற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பேனர் ஒரு பகுதியில் இரட்டை இலை இடம் பெற வேண்டும். அண்ணாதுரை படம் சிறிய அளவில் இருந்தால் போதும். எம்.ஜி.ஆர்., படம் அதை விட பெரியதாக இருக்க வேண்டும். பேனரின் ஒரு புறம் ஜெ., படம் பெரிதாக இருக்க வேண்டும்.

அதற்கு நிகராக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டும், அதே சைஸில் இடம் பெற வேண்டும். அதற்கு கீழ் தலைமை கழக நிர்வாகிகள் படமும், அதை விட சற்று சிறிதாக, மாவட்ட செயலாளர் படமும் இருக்க வேண்டும். மற்ற நிர்வாகிகளின் படங்கள், ஒரே சைஸில் வரிசையாக கீழ்ப்பகுதியில் இடம் பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது’’ என்றனர்.

 

MUST READ