தமிழ்நாட்டை வன்முறை காடாக்க பாஜகவினர் முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களிடம் அரசும் காவல் துறையும் கவனமாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில், டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து திருமாவளவன் எம்பி கோரிக்கை மனு அளித்தார். அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழ்நாட்டில் காவி சாயம் பூசுவது போன்ற நடவடிக்கைகளில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.


மேலும், ஆரணியில் நடந்த ஒரு சம்பவதிற்காக விசிக பிறமுகர் மீது வழக்கு பதிவு செய்து கிராமம் கிராமமாக சென்று தேடுதல் வேட்டை நடத்தி கொண்டு இருக்கிறார்கள். வேண்டும் என்றே வீம்புக்கு வம்பு இழுக்கும் வகையில் பேசும் பாஜகவினர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்கிற கேள்வி எழுகிறது. ஆதலால் தான் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேங்கை வயல் விவகாரத்தில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுக்களை டிஜிபி இடம் அளித்துள்ளோம் என்றார்.
கர்னல் பாண்டியனை தூண்டிவிடுகின்ற அளவுக்கு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை.
வட மாநிலங்களில் இருப்பதை போன்று, உத்திர பிரதேசத்தில் இருப்பதை போன்று தமிழ்நாட்டை வன்முறை காடாக்க பாஜகவினர் முயன்று வருகிறார்கள். அரசும் காவல் துறையும் கவனமாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.
வடமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு தமிழ்நாட்டில் இருந்து வடமாநிலத்திற்கோ புலம் பெயர்பவர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் மக்கள் ஊர் ஊராக அலைவதற்கு நரேந்திர மோடி தான் பொறுப்பு ஏற்கவேண்டும்.

ஸ்டேட் விஜிலென்ஸ் monitoring குழுவுடன் பேசி இருக்கிறோம். முதலமைச்சர் கவனிதிற்கு எடுத்து சென்று உள்ளோம். மக்கள் இந்த கலாச்சாரத்தை எல்லாம் கடந்து யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள்.
வேண்டுமென்றே தமிழ்நாட்டில் ஒரு பதற்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற ஆளுநர் உட்பட பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர் காவல்துறையினர் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பாஜகவினர் அவர்களது வீட்டின் மேலே பெட்ரோல் குண்டு வீசுவார்கள் பின்பு அவர்களே அதை பற்றி பேசுவார்கள் இது சங்பரிவார் கும்பளின் செயல்.
தேர்தலில், பணம் கொடுப்பவர்களை நாம் விமர்சிக்கிறோம் என்பதைவிட பணம் வாங்குகிற சாதாரண மக்களை தான் நாம் விமர்சிக்கிறோம். மக்கள் இந்த கலாச்சாரத்தை எல்லாம் கடந்து யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள். இவ்வாறு தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார்.
