திருமாவளவன் கொள்கைகாக எதையும் இழப்பார், கொள்கையை இழக்க எதையும் பெறமாட்டார், விஜய் வருகையால் கூட்டணிக்கு பாதிப்பு இல்லை 234 தொகுதியிலும் வெற்றி பெருவோம் சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் முன்னால் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி அளித்துள்ளார்.
சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு முன்னால் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது,

”விஜய் வருகையால் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை கூட்டணி ஒற்றுமையுடன் உள்ளது, தமிழக முதலமைச்சர் நன்றாக செயல்படுகிறார், பம்மரமாக செயல்பட்டு மக்களுக்கான ஆட்சி நடத்துகிறார், ஏற்கனவே 40 நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றோம் அதுபோல் 234 சட்டமன்ற தொகுதியிலும் வெற்றி பெருவோம் என்றார்.
ஆர்.எஸ்.எஸ் அண்ணாமலையை இறக்கியது, எடப்பாடியை இறக்கியது இதுபோல் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது ஆனால் திருமாவளவனை பற்றி எனக்கு நன்கு தெரியும். திருமாவளவன் கொள்கைகாக எதையும் இழப்பார், கொள்கையை இழக்க எதையும் பெறமாட்டார் என்றார்.
ஆதவ் அர்ஜினா அவர் கருத்தை சொன்னார் அது எடுபடவில்லை அந்த காட்சியிலேயே தண்டிக்கப்பட்டுள்ளார். மேலும் சட்டமன்ற தேர்தல் குறித்து சந்திப்புகள் நடைபெறுகிறது என்றார்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.