Homeசெய்திகள்அரசியல்இடைத்தேர்தலில் போட்டியிட்டுதான் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை- அண்ணாமலை

இடைத்தேர்தலில் போட்டியிட்டுதான் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை- அண்ணாமலை

-

- Advertisement -

நெல்லை மாவட்டத்தில் உள்ள மாற்று கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்பு கட்சியில் இணையும் விழா பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் நடைபெற்றது.

chennai gun shooting

we-r-hiring

இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “ஈரோடு இடைத்தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னே அமைச்சர்கள் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். அமாவாசை அன்று நல்ல நாள் பார்த்து திமுகவினர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அமைச்சர்கள் படை பரிவாரத்தோடு சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இது மற்ற தேர்தலை காட்டிலும் விசித்திரமான தேர்தலாக உள்ளது. ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வேட்பாளர் அறிவித்ததில் அதிருப்தியில் உள்ளார்.

இதனை மறைப்பதற்கு திமுக கபட நாடகம் போடுகிறது. சுதந்திரத்திற்கு பின் நடந்த இடைத்தேர்தலில் 80 சதவீதம் ஆளும் கட்சி தான் வெற்றி பெற்றுள்ளது. பணமழை அதிகம் கொட்டி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த தேர்தலில் பாஜக போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கட்சி மூத்த தலைவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். தேர்தல் வேட்பு மனு தாக்களுக்கு நாட்கள் உள்ளது.

பாஜக அதிமுக கூட்டணியில் அதிமுக பலமான கட்சியாக உள்ளது. முன்னாள் அமைச்சர்கள் உள்ளனர். பல வேட்பாளர்களை நிறுத்தி வாக்குகளை பிரிக்க வேண்டாம். கூட்டணியினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே விருப்பம். இடைத்தேர்தலில் பணபலம், படைபலம் அதிகார துஷ்ப்ரயோகம் தான் வெற்றி பெறும். இந்த தேர்தல் பாஜகவிற்கான தேர்தல் இல்லை. எங்களுக்கான தேர்தல் 2024 நாடாளுமன்ற தேர்தல் மட்டுமே பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்குவதில் எங்களது பணி சிறப்பாக இருக்கும். இந்த இடைத்தேர்தல் பாஜகவின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயமில்லை. அதிமுக பிரதான கட்சியாக உள்ளது பலம் வாய்ந்த வேட்பாளரை ஆதரித்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே நோக்கம்” எனக் கூறினார்.

MUST READ