சேலம் மாவட்டம் திமுக இளைஞரணி அமைப்பாளர் இல்ல திருமண விழாவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

சேலம் மாவட்டம் திமுக இளைஞரணி அமைப்பாளர் மு.மணிகண்டன் இல்லத் திருமண விழா மகுடஞ்சாவடி ஒன்றியம் நடுவனேரி இல்லத்தில் நடைபெற்றது. திருமண விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ ஓபிஎஸ், இபிஎஸ் போல் இல்லாமல் மணமக்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலுக்காக பொறுப்பு அமைச்சராக நேரு நியமிக்கப்பட்டுள்ளார். கண்டிப்பாக ஈரோடு தொகுதியில் மிகப்பெரிய வெற்றி அடைவோம்” எனக் கூறினார்.
பின்னர் மணமக்கள் மற்றும் குடும்பத்துடன் அமைச்சர் உதயநிதி, புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
