தன்னை இகழ்ச்சியாக பேசிய தயாரிப்பாளருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமந்தா புதிய பதிவு வெளியிட்டுள்ளார்.
சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான சாகுந்தலம் படம் மக்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. தயாரிப்பாளருக்கு சுமார் 20 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


சமந்தா எமோஷனல் ஆக பேசி படங்களை ஓட வைக்க முயற்சிக்கிறார் அது இனிமேல் நடக்காது,அவர் சினிமா கேரியர் முடிந்துவிட்டது என்று தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டி பாபு ஒரு பேட்டியில் பேசினார்.
“ஹீரோயினாக அவரது வாழ்க்கை முடிந்துவிட்டது. சமந்தாவால் மீண்டும் நட்சத்திர அந்தஸ்துக்கு திரும்ப முடியாது. கதாநாயகி அந்தஸ்தை இழந்த சமந்தாவை சாகுந்தலம் கதாபாத்திரத்திற்கு எப்படி தேர்வு செய்தார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.” என்ற வகையிலும் பேசியிருந்தார்.
இந்நிலையில் சமந்தா தற்போது ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். “அதில் காதுகளில் அதிகம் முடி வளருவதற்கு ஆண்மைக்கான டெஸ்டிரோன் அதிகரிப்பது தான் காரணமாக இருக்கும்” என்று கூகுள் காண்பித்த பதிலை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ஸ்டேட்ஸில் வைத்துள்ளார்.
தயாரிப்பாளர் சிட்டி பாபுவுக்கு காதில் அதிகம் முடி இருக்கும். எனவே சமந்தா அவரைக் குறிப்பிட்டு தான் இந்தப் பதிவை வைத்துள்ளார் என்று தெளிவாகத் தெரிகிறது.