- Advertisement -
பல்லாயிரம் ஏழைகள் கண்ணொளி பெற காரணமாக இருந்த சங்கர நேத்ராலயா நிறுவனர் டாக்டர் பத்ரிநாத் காலமானார்.!
சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத், இன்று (நவ.21) காலை அவரது இல்லத்தில் காலமானார். இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு நிறுவன மருத்துவமனைகளில் ஒன்றான சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவமனையை நிறுவியவர் பத்ரிநாத். இவருக்கு வயது (83).

இவரது சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் ஏழைகளுக்கு கண்புரை அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டு வருகிறது.
இவரது சேவைக்காக பத்மபூஷன், பத்மஸ்ரீ, டாக்டர் பிசி ராய் விருது, சிவிலியன் விருது உள்பட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
பல்லாயிரம் ஏழை எளிய மக்கள் இம்மருத்துவமனை வாயிலாக கண்ணொளி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.