spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டு நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இந்திய மகளிர் அணி

 நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இந்திய மகளிர் அணி

-

- Advertisement -

நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன. இந்நிலையில், தொடரை கைப்பற்றப்போது யார் என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி  குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது.

we-r-hiring

இந்த போட்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து மகளிர் அணி 49.5 ஓவர்களில்  232 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக புருக் ஹாலிடே 86 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 233 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 44.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா சதம் விளாசி அசத்தினார்.


இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2- 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. மேலும் போட்டியில் சதம் விளாசிய மந்தனா,  ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். முன்னதாக மிதாலிராஜ் 7 சதம் அடித்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது 8 சதங்களுடன் மந்தனா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

MUST READ