Homeசெய்திகள்விளையாட்டு2023 உலகக்கோப்பை - பிசிசிஐ புது வியூகம்

2023 உலகக்கோப்பை – பிசிசிஐ புது வியூகம்

-

உலகக் கோப்பைக்கு இந்திய அணியை தயார் படுத்தும் நோக்கில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியா பலம் வாய்ந்த அணியாக இருந்து வந்தாலும் உலகக்கோப்பை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த நிலையில் உலகக் கோப்பைக்கு இந்திய அணியை தயார்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தலைமையில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம் பெற ரஞ்சி, துலிப் கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளில் கணிசமான அளவு விளையாடியிருக்க வேண்டும் என்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் யோ – யோ மற்றும் DEXA உடற்பயிற்சி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்பதை மீண்டும் கட்டாயமாக்கி அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம் அவ்வப்போது வீரர்களுக்கு காயம் ஏற்படுவதை தடுக்க முடியும் என கருதப்படுகிறது.

இந்த ஆண்டு 35 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாட உள்ள நிலையில் உலககோப்பை க்கு தயாராகும் வகையில் 20 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கவும் ஐபிஎல் போட்டிகளில் அவர்கள் கண்காணிக்கப்படுபவர் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

MUST READ