spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டு2023 உலகக்கோப்பைக் கிரிக்கெட்- அதிக பார்வையாளர்கள் நேரில் பார்த்த தொடர்!

2023 உலகக்கோப்பைக் கிரிக்கெட்- அதிக பார்வையாளர்கள் நேரில் பார்த்த தொடர்!

-

- Advertisement -

 

2023 உலகக்கோப்பைக் கிரிக்கெட்- அதிக பார்வையாளர்கள் நேரில் பார்த்த தொடர்!
Photo: ICC

அதிக நேரடி பார்வையாளர்களைப் பெற்ற சர்வதேச கிரிக்கெட் தொடராக, சமீபத்தில் நடந்த 2023 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர் சாதனைப் படைத்துள்ளது.

we-r-hiring

டிச.3-க்குள் பூத் கமிட்டி பணிகளை முடிக்க அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்!

இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த அக்டோபர் மாதம் 05- ஆம் தேதி தொடங்கிய உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர், கடந்த நவம்பர் 19- ஆம் தேதி நிறைவுப் பெற்றது.

மொத்தம் 48 போட்டிகள் நடைபெற்ற நிலையில், இந்த போட்டிகளை மைதானத்தில் நேரடியாக வந்து பார்வையிட்டோரின் எண்ணிக்கை 12 லட்சத்து 50 ஆயிரத்து 307 என ஐ.சி.சி. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘நவ.26- ஆம் தேதி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்’ என அறிவிப்பு!

இதன்மூலம் ஒரு சர்வதேச கிரிக்கெட் தொடரை அதிக மக்கள் பார்வையிட்டனர் என்ற பெருமையை 2023 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர் பெற்றுள்ளது. கடந்த 2015- ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரை 10 லட்சத்து 16 ஆயிரத்து 420 பேர் நேரடியாகக் கண்டு ரசித்திருந்தனர்.

MUST READ