Homeசெய்திகள்2036 ஒலிம்பிக் போட்டி - அனுமதி கோரி அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்த இந்தியா

2036 ஒலிம்பிக் போட்டி – அனுமதி கோரி அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்த இந்தியா

-

- Advertisement -

2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த அனுமதி கோரி அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளது இந்தியா

2036 ஒலிம்பிக் போட்டி - அனுமதி கோரி அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்த இந்தியா

we-r-hiring

2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி, இந்திய ஒலிம்பிக் சங்கம்(IOA) அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கடிதம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம்(IOC) ஹோஸ்ட் கமிஷனிடம் அக் 1ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடு குறித்த இறுதி முடிவு அடுத்தாண்டு IOC தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும்.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடக்கும் எனவும் இது 140 கோடி இந்தியர்களின் கனவு எனவும் தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் ஒலிம்பிக் நடத்துவதற்கு தகுதியான நகரங்கள், அவற்றில் இருக்கும் வசதிகள் உள்பட பல்வேறு தகவல்களும், ஒலிம்பிக் போட்டி நடத்த அனுமதி அளித்தால், இந்திய அரசு என்னென்ன உதவிகள் செய்யும் என்ற விவரங்களும் அந்த விண்ணப்பத்தில் இடம் பெற்றுள்ளன.

MUST READ