Homeசெய்திகள்விளையாட்டுடி-20: அடித்து நொறுக்கிய டாப்- 5 இந்திய வீரர்கள்: மண்டியிட வைத்து மரண பங்கம்

டி-20: அடித்து நொறுக்கிய டாப்- 5 இந்திய வீரர்கள்: மண்டியிட வைத்து மரண பங்கம்

-

- Advertisement -

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரை 3-1 என கைப்பற்றியது. பேட்ஸ்மேன்களின் பலத்தில், இந்தியா போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்க அணியை மண்டியிட வைத்தது. இந்திய அணி 4 போட்டிகளில் மூன்று முறை 200 ரன்களுக்கு மேல் குவித்தது.

ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியல்- இந்திய வீரர்கள் ஆதிக்கம்!
Photo: ICC

கடந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் 283 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி சார்பில் திலக் வர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தலா 2 சதங்கள் அடித்தனர். இந்த தொடரில் இருவரும் 200 ரன்களுக்கு மேல் குவித்தனர். இந்த சந்தர்ப்பத்தில், டி20 தொடரில் அதிக ரன்களை குவித்த டாப்-5 இந்திய பேட்ஸ்மேன்கள் பற்றி இப்போது படிக்கலாம்.

இருதரப்பு டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை திலக் வர்மா பெற்றுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் திலக் 280 ரன்கள் எடுத்தார். டி20 தொடரில் 250 ரன்களை எட்டிய முதல் இந்தியர் இவர்தான்.

இங்கிலாந்து 2021-ல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. அந்தத் தொடரில் இந்திய அணிக்காக விராட் கோலி 231 ரன்கள் எடுத்திருந்தார். திலக், விராட்டின் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்த பட்டியலில் கே.எல் ராகுலும் இடம்பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ராகுல் 224 ரன்கள் எடுத்திருந்தார். 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்திய அணி நியூசிலாந்து சென்று தொடரை 5-0 என கைப்பற்றியது.

கடந்த ஆண்டு, ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்தியா – ஆஸ்திரேலியா இடையே டி20 தொடர் நடைபெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணிக்காக தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 223 ரன்கள் குவித்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சஞ்சு சாம்சன் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார். 4 போட்டிகளில் 216 ரன்களுடன் பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.

MUST READ