Homeசெய்திகள்விளையாட்டுஆப்கானிஸ்தான் அணிக்கு 182 ரன்கள் இலக்கு!

ஆப்கானிஸ்தான் அணிக்கு 182 ரன்கள் இலக்கு!

-

- Advertisement -

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ”சூப்பர் 8” சுற்று ஆட்டத்தில் இந்திய அணி முதலாவது பேட்டிங்கில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 181 ரன்கள் எடுத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்நிலையில் இன்று நடைபெறும் ’சூப்பர் 8’ சுற்றில் 43வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்திய அணி ரோகித் சர்மா தலைமையிலும் ஆப்கானிஸ்தான் அணியானது ரஷித் கான் தலைமையிலும் களம் கண்டன. இந்த ஆட்டமானது வெஸ்ட் இண்டீஸ் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி பந்துவீசியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 8 ரன்களிலும் விராட் கோலி 24 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் 20 ரன்களிலும் சூர்யகுமார் யாதவ் 53 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 181 ரன்கள் எடுத்தது. பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் இரண்டாவது பேட்டிங் விளையாடி வருகிறது. தற்போது வரை அணியானது 4.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 23 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

 

MUST READ