spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக அஜித் அகர்கர் நியமனம்!

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக அஜித் அகர்கர் நியமனம்!

-

- Advertisement -

 

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக அஜித் அகர்கர் நியமனம்!
Photo: BCCI

ஒருநாள் போட்டிகளில் மிகக்குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய இந்திய வீரர், மிக விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய அஜித் அகர்கரை இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

we-r-hiring

31,008 பள்ளிகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மூன்று உறுப்பினர்களைக் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழு அஜித் அகர்கர் பெயரை ஒருமனதாகப் பரிந்துரைச் செய்துள்ளது. இதையடுத்து, அஜித் அகர்கர், இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்காக அஜித் அகர்கர், 26 டெஸ்ட் போட்டிகள், 191 ஒருநாள் போட்டிகள், 4 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் மிகக்குறைந்த பந்துகளில் அரைசதம் கடந்த இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். கடந்த 2000- ஆம் ஆண்டில் ஜிம்பாவேவுக்கு எதிரான போட்டியில் 21 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அதேபோல், ஒருநாள் போட்டிகளில் மிக விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

திரையரங்குகளுக்கான டிக்கெட் கட்டணத்தை உயர்த்தக் கோரிக்கை!

அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவில், சிவசுந்தர் தாஸ், சுப்ரதோ பானர்ஜி, சலீல் அங்கோலா, ஸ்ரீதரன் சரத் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

MUST READ