Homeசெய்திகள்விளையாட்டுஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி

-

- Advertisement -

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் தென்கொரியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு 6வது முறையாக முன்னேறியது.

6 அணிகள் பங்கேற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவில் நடந்து வருகிறது. குருப் சுற்று ஆட்டங்களில் தோல்வியே காணாத இந்திய அணி அரையிறுதியில் தென் கொரியாவுடன் மோதியது. இந்த போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி அடுத்தடுத்து கோல்கள் அடித்து அசத்தியது.

போட்டியின் 13வது நிமிடத்தில் இந்தியாவின் உத்தம் சிங் கோல் அடித்து, இந்தியாவின் கோல் கணக்கை தொடங்கினார். பின்னர் கேப்டன் ஹர்மன்பிரித் சிங் 19 மற்றும் 45 வது நிமிடங்களில் பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார். 32வது நிமிடத்தில் மற்றொரு இந்திய வீரரான ஜர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார். தென்கொரியா தரப்பில் யாங் ஜிஹுன் ஒரு கோல் அடித்து ஆறுதல் அளித்தார்.

ஆட்டநேர முடிவில் 4-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் சீனாவுடன் இந்திய அணி மோதுகிறது.

MUST READ