டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலாவது பேட்டிங்கில் 115 ரன்கள் எடுத்துள்ளது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்து தற்போது சூப்பர் 8 சுற்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டி மேற்கிந்திய தீவுகளில் உள்ள ஆலன் வாலே மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரமனுல்லா குர்பாஸ் 43 ரன்களிலும் இப்ராஹிம் சட்ரன் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 115 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சு தரப்பில் ரிஷாத் ஹசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் வங்காளதேச அணி இரண்டாவது பேட்டிங் விளையாடவுள்ளது.