spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுவிளையாட்டு வீரர்களுக்கு அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படும் - அமைச்சர் உதயநிதி

விளையாட்டு வீரர்களுக்கு அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படும் – அமைச்சர் உதயநிதி

-

- Advertisement -

சென்னை எழும்பூர் ஹாக்கி மைதானத்தில் நடந்த பெண்களுக்கான ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நிறைவு விழாவில் கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என தெரிவித்தார்.

we-r-hiring

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் சென்னை எழும்பூர் ஹாக்கி மைதானத்தில் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை என ஐந்து நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 26 பல்கலைக்கழக அணிகள் இதில் பங்கேற்றது.

தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் மைசூர் பல்கலைக்கழகம் முதலிடம் பெற்று 1லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை கைப்பற்றியது. கோவை பாரதியார் பல்கலைக்கழகம் இரண்டாம் இடம் பெற்று 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையை கைப்பற்றியது. மூன்றாம் இடம் பெற்ற கோழிக்கோடு பல்கலைக்கழகம் 25 ஆயிரம் ரூபாயும், நான்காம் இடம் பெற்ற சென்னை பல்கலைக்கழகம் 10 ஆயிரம் ரூபாயும் பரிசுத் தொகையை வென்றது.

பெண்களுக்கான ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நிறைவு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பெருமக்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன், ரகுபதி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அப்போது பேசிய அவர் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்துக்கள். இந்த மைதானத்திற்கு ஏற்கனவே வந்த போது விளையாட்டு வீரர்களுக்கு என பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. அதனை துறை ரீதியாக விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் பூர்த்தி செய்யப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

MUST READ