Homeசெய்திகள்விளையாட்டுபாக்சிங் டே டெஸ்ட் போட்டி: இந்திய அணி போராடி தோல்வி!

பாக்சிங் டே டெஸ்ட் போட்டி: இந்திய அணி போராடி தோல்வி!

-

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்பர்னில் கடந்த 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி, நிதிஷ் குமார் ரெட்டி சதம் உதவியுடன் 369 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி இன்றைய 5ஆம் ஆட்டத்தின்போது 234 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லபுஷேன் 70 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதன் மூலம் இந்திய அணிக்கு 340 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய பேட்ஸ்மேன்கள், ஆஸ்திரேலியாவின் அபாரமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தது விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் ரோகித் சர்மா 9 ரன்னிலும், ராகுல் 0, கோலி 5 ரன்கள் என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தபோதும், தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் தனி ஒருவனாக நின்று ரன் சேர்த்து வந்தார். அவரும் 84 ரன்களுக்கு, கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

முடிவில் 97.1 ஓவர்களில் இந்திய அணி 2வது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்குகிறது.

MUST READ