spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுசெஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

-

- Advertisement -

செஸ் ஒலிம்பியாட் ஆடவர் மற்றும் மகளிர் அணியில் தங்கப்பதக்கம் வென்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் – இல் நடந்து வருகிறது. இதில் நடைபெற்ற இறுதி சுற்றில் இந்திய ஆடவர் அணி ஸ்லோவேனியாவையும், மகளிர் அணி அஜர்பைஜானையும் எதிர்க்கொண்டு வெற்றி பெற்று இரண்டு தங்கம் பதக்கம் வென்றது. இந்திய அணி செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

we-r-hiring

இதற்கு முன்பு இந்திய ஆடவர் அணியினர் 2014ஆம் ஆண்டு மற்றும் கடந்த முறை சென்னையில் நடைபெற்ற 2022ஆம் ஆண்டு ஆகிய இரண்டு போட்டிகளில் மட்டுமே வெண்கலம் பதக்கம் வென்றுள்ளன. அதேபோல, மகளிர் அணியினர் கடந்த முறை 2022ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற போட்டியில் மட்டும் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளன. அந்தவகையில் செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்திய அணிகள் தங்கம் வென்றுள்ளது, இதனால் பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் ஆடவர் அணியில் பங்கேற்ற பிரக்ஞானந்தாவும், மகளிர் அணியில் பங்கேற்ற வைஷாலியும் விமான மூலம் நாடு திரும்பி உள்ளனர். சென்னை வந்தடைந்த இருவருக்கும் விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்துச் செய்தியாளர்களை சந்தித்து பேசியது

ஹங்கேரில் நடைபெற்ற 45 வது ஒலிம்பியாட் போட்டியில் ஆடவர் மற்றும் பெண்கள் பிரிவு என இரு அணிகளும் தங்கப் பதக்கம் வென்றிருப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

கடந்து 2022 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டியில் பெண்கள் அப்போது தங்கப்பதக்கம் வெல்ல முடிய விலலை என்கிற வருத்தம் இருந்தது. தற்போது அதில் கிடைத்த அனுபவத்தை வைத்து இந்த போட்டியில் பதக்கத்தை வென்றிருக்கிறோம்.

இரு அணிகளிலும் இருக்கக்கூடிய வீரர்கள் சிறப்பான முறையில் விளையாடினோம் இதற்கு முன்பு விளையாட்டு போட்டியில் கிடைத்த அனுபவத்தை பயன்படுத்தி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வெல்வதற்கு பயனுள்ளதாக அமைந்தது என கூறினார்.

MUST READ