நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி இருந்து வந்த நிலையில், நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 17- வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான கோப்பை அறிமுக நிகழ்ச்சியில், சக அணிகளின் கேப்டன்களுடன் ருத்துராஜ் கெய்க்வாட் கலந்து கொண்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில் சென்னை அணியின் கேப்டன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 2008- ஆம் ஆண்டு முதல் சென்னை அணியின் கேப்டனாக தோனி இருந்து வரும் நிலையில் மாற்றப்பட்டுள்ளார்.
2021- ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரவீந்திர ஜடேஜா கேப்டனாக செயல்பட்ட நிலையில், பாதி தொடரில் மீண்டும் கேப்டன் ஆனார் தோனி.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 28ஆவது முறையாக நீட்டிப்பு!
5 கோப்பைகள் வென்ற இரு அணிகளின் கேப்டன்களும் மாற்றம்!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 5 கோப்பைகளை வென்ற சென்னை, மும்பை ஆகிய அணிகளின் கேப்டன்கள் இம்முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் சர்மாவுக்கு பதில் ஹர்திக் பாண்டியாவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு பதில் ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.