Homeசெய்திகள்விளையாட்டுசென்னை அணிக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி!

சென்னை அணிக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி!

-

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 137 ரன்கள் எடுத்து சென்னை அணிக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இன்று நடைபெற்ற 22வது ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் லைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. சென்னை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் இரண்டு வெற்றி இரண்டு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் மூன்றையும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 28 போட்டிகளில் சந்தித்துள்ளன. இதில் 18 போட்டிகளில் சென்னை அணியும் 10 போட்டிகளில் கொல்கத்தா அணியும் வெற்றியை பெற்றுள்ளன..

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து கொல்கத்தா அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பில் சால்ட் ரன் ஏதுமின்றியும் சுனில் நரேன் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரகுவன்ஷி 24 ரன்னிலும் ஸ்ரேயர்ஸ் அய்யர் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 137 ரன்கள் எடுத்தது. பின்னர் 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடவுள்ளது.

MUST READ