17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெறும் 61வது லீக் போட்டியில் சென்னைvsராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 60 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 61வது லீக் போட்டி நடைபெறுகிறது. சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 61வது லீக் போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 6 வெற்றி 6 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திலுள்ளது. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 8வெற்றி 3 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திலுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 15 முறையும் ராஜஸ்தான் அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. சென்னை அணியை பொறுத்தவரை இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் தோல்வி பெற்றால் லீக் சுற்றிலிருந்து வெளியேற வேண்டியதுதான். ஆகையால் சென்னை அணி இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திலுள்ளது. ராஜஸ்தான் அணியானது 8 வெற்றியை பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இப்போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற மல்லுக்கட்டும் என்பதால் இந்தாட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.