Homeசெய்திகள்விளையாட்டுபொளந்து கட்டிய போரெல்...பஞ்சாப் அணிக்கு 175 ரன்கள் இலக்கு

பொளந்து கட்டிய போரெல்…பஞ்சாப் அணிக்கு 175 ரன்கள் இலக்கு

-

பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 174 ரன்கள் குவித்துள்ளது.

17வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதலாவது லீக் ஆட்டத்தில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாப் டூ பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூ பிளஸ்சிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலாவதாக பேட்டிங் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.4 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், சண்டிகரில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதலாவதாக பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலாவதாக பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 33 ரன்களும், அபிஷேக் போரேல் 32 ரன்களும் எடுத்தனர்.

MUST READ