மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் டெல்லி அணி அபாரம்
மகளிர் பிரிமீயர் கிரிக்கெட் போட்டியில் மும்பையை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி கேப்பிட்டல் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. நேற்று மாலை நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத்தை வீழ்த்திய உ.பி. வாரியர்ஸ் ப்ளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பை உறுதி செய்தது.
நேற்று இரவு நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் மும்பை, டெல்லி அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கட்டுகளை இழந்து 109 ரன்கள் மட்டும் எடுத்தது. எளிய இலக்கை துரத்திய டெல்லி கேப்பிட்டல் வீராங்கனைகள் தொடக்கம் முதலே அதிரடி காட்டினர்.
ஆலிஸ் கேப்ஸியின் சிக்ஸர் மழையால் டெல்லி அணி 9 ஓவர்களில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
அடுத்த சுற்று வாய்ப்பு இழந்துவிட்ட பெங்களூர் அணி இன்று நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி உடன் மோதுகிறது. இரண்டாவதாக நடைபெறும் போட்டியில் டெல்லி மற்றும் உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
டெல்லி, மும்பை, உ.பி. வாரியர்ஸ் என யார் நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்வார்கள் என்பதை தீர்மானிக்கும் ஆட்டங்கள் இன்று நடைபெறுவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.